நயனின் அழகில் மயங்கிய பாலிவுட் நடிகை !!!.. பாராட்டிய பேட்மிட்டன் வீராங்கனை..

நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என தென்னிந்திய மொழிப்படங்களில் படுபிசியாக உள்ளார்.

 

நயன்தாராவின் புன்னகையும், அழகும் ரசிகர்களை கட்டி வைத்திருக்கிறது. ஆண் ரசிகர்களை அதிகம் கொண்டுள்ள தேவதையாக வளம் வருகிறார். இதே நிலையில் பாலிவுட் திரையுலகில் பல நாயகிகளுக்கும் மத்தியில் பிரபலமாக உள்ளவர் கத்ரினா கைப்.

73765

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம்வரும் கத்ரினா கைப்  சொந்தமாக அழகு சாதனப்பொருட்கள் நிறுவனம் ஒன்றினை துவங்கியுள்ளார். அதன் பிரமொசன்களுக்காக நடிகைகள் இணைந்து நடித்துள்ள வீடியோ ஒன்றினை வெளியிட்டார்.

அந்த வீடியோவில் நம்ம தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில் பாலிவுட்ட்டின்  முன்னணி நாயகி கத்ரினா கைப் தன்னுடைய இன்ஸ்டா கிராம் பக்கத்தில் பார்ட்டி பகிர்ந்துள்ளார்.

katrina-nayanthara-1571715020

அதில், தென்னிந்திய சூப்பர் ஸ்டார், அழகான நயன்தாராவுக்கு மிகப்பெரிய நன்றி. உங்களுடைய பரபரப்பான சூழலிலும் எனக்கு நேரம் ஒதுக்கி பிரச்சார வீடியோவிற்கு உதவிய  அழகுக்கு  நன்றி எனத் தெரிவித்துள்ளார். மேலும் பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நோவல் அவர்களும் நயன்தாரா குறித்து பாராட்டியுள்ளாராம். அதுவும் ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: