வெய்யோன் சில்லி என்றால் சூரியனின் துண்டு. பாடலில் பல்லவியின் முதல் வார்த்தையில் சர்ப்ரைஸ் வைத்த கவிஞர் விவேக். சூரரைப் போற்று.

தமிழ் சினிமாவின் இன்றைய முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவராக இருப்பவர் கவிஞர் விவேக். நடிகர் விஜய்க்கு அவர் எழுதிய ஆளப்போறான் தமிழன் பாடல் மற்றும் பிகில் படத்தில் சிங்க பெண்ணே பாடல் அவரை உச்சத்துக்கு கொண்டு சென்றது. 


 பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்டை படத்தில் அனிருத் இசையில் விவேக் எழுதிய தட்லாட்டம் பாடல் மிகப்பெரிய வெற்றியையும் அங்கீகாரத்தையும் பெற்று தந்தது. 

சூர்யாவைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்களைப் இந்த Youtube லிங்கில் படியுங்கள்

https://youtu.be/KSs2DaIMA38

ஒவ்வொருவர் வீட்டு குழந்தைகளும் எளிமையாக பாடும் வண்ணம் வரிகள் அமைந்ததால் மிகப் பெரிய ரசிகர் கூட்டத்தை பெற்றுத்தந்தது.


 அதன் பிறகு மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை கொண்ட நடிகர்களுக்கு பாடல் எழுதும் வாய்ப்பு பெற்று வருகிறார். அந்த வரிசையில் தற்பொழுது நடிகர் சூர்யாவிற்கு கவிஞர் விவேக் அவர்கள் சூரரைப்போற்று படத்தில் பாடல் எழுதியிருக்கிறார். 
 முதன்முறையாக சூர்யா படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் பாடல் எழுதியிருக்கும் விவேக் அதை மகிழ்வுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். 

அந்தப் பாடலின் பல்லவியில் முதல்வரி வெய்யோன் என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார் கவிஞர் விவேக். அந்த வெய்யோன் சில்லி என்ற சொல்லுக்கு சூரியனின் துண்டு என்று பொருள். 


 சூரியன் என்ற பொருளில் வெய்யோன் என்ற சொல்லை பயன்படுத்தி சென்டிமென்டாக சூர்யாவின் பெயரை குறிக்கும் வண்ணம் வார்த்தை அமைத்து சூர்யாவிற்கும் சூர்யாவின் ரசிகர்களுக்கும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியும் கொடுத்திருக்கிறார். 


 கவிஞர் விவேக் அவர்கள் மென்மேலும் உச்சத்தைத் தொட்டு நற்புகழ் அடைய தி மூவிஸ் ஆப் இந்தியா வாழ்த்துகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: