காஞ்சிபுரம் மாவட்டம் திருவங்காரனை கிராமத்தில் தொடர்ந்து மரம் நடும் விழாக்கள். சாதித்துக் காட்டிய Exnora ஜானகிராமன்

காஞ்சிபுரம் மாவட்டம் திருவங்காரனை கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் கிராம முன்னேற்ற விழிப்புணர்வு விழா பிப்ரவரி 16,  2020 ஞாயிறு காலை 10 மணிக்கு நடைபெற்றது.

இந்த விழாவில் திரைப்பட நடிகர் நகைச்சுவை மன்னன் மயில்சாமி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். 

மேலும் நல்லோர் வட்டத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம்,  அன்பு, மோகனசுந்தரம் அவர்களும்,  மாணிக்க மாணவர் நல்லோர் வட்டத்தைச் சேர்ந்த கோகுல் அவர்களும், கிராம மேம்பாட்டு பவுண்டேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தை சேர்ந்த திரு அறவாழி  அவர்களும், ஜி.பி.டி.பி ஒருங்கிணைப்பாளர் கௌதம் அவர்களும், இசையமைப்பாளர் திரு பாமரன் அவர்களும் கலந்து கொண்டனர். 

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த திருவங்காரனை கிராமத்தை தமிழகத்தின் முதன்மை கிராமமாக முன்னெடுக்க வேண்டி ஏற்கனவே Exnora ஜானகிராமன் அவர்கள் பல்வேறு முயற்சியை எடுத்துள்ளார்.

 திரைப்பட நடிகர் சௌந்தரராஜன், காஞ்சிபுரம் எம்எல்ஏ சுந்தர் மற்றும் Exnora தலைவர் நிர்மல் போன்ற முக்கிய பிரமுகர்களை வரவழைத்து அந்தக் கிராமத்தின் முன்னேற்றத்திற்காக விழிப்புணர்வு கூட்டத்தையும் மரம் நடும் விழாக்களையும் நடத்தி காட்டினார்.

திருவங்காரனை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களையும் பொது மக்களையும் ஒருங்கிணைத்து ஜானகிராமன் அவர்கள் இந்த பணியை செய்து வருகிறார்.

திருவங்காரனை கிராம மக்களும்,  திருவங்காரனை Exnora  உறுப்பினர்களும் தங்களது கிராமத்தை பசுமை கிராமமாக அடிப்படை கட்டமைப்புகள் நிறைந்த கிராமமாக மாற்ற அரும்பாடுபட்டு வருகிறார்கள்.

 அவர்களுக்கு பக்கபலமாக Exnora ஜானகிராமன் இருந்து வருகிறார்.

 அப்துல் கலாம் அவர்கள் கிராமத்தின் முன்னேற்றமே இந்திய நாட்டின் முன்னேற்றம். எனவே ஒவ்வொருவரும் இந்தியாவின் கிராமங்களை முன்னேற்ற பாடுபடவேண்டும் என்றார்.

 அந்தவகையில் நடிகர் விவேக் அவர்கள் அப்துல்கலாம் அவர்களின் கனவான ஒரு கோடி மரங்கள் நடுவது என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். அந்த வரிசையில் ஜானகிராமன் அவர்களும் தான் பிறந்த ஊரான திருவங்காரனை கிராமத்தை முன்னேற்ற பாடுபட்டு வருவது பாராட்டத்தக்கது.

விதைகள் செடிகள் நடுவது மட்டுமல்லாமல், தங்கள் நட்டுவைத்த விதைகளையும் செடிகளையும் தொடர்ந்து பராமரித்து வருகிறார்கள். திருவங்காரனை கிராம மக்களைப் போல, ஜானகிராமனை போல ஒவ்வொரு கிராமமும், கிராமத்தில் பிறந்தவர்கள் தங்களது கிராமத்தை முன்னேற்ற முயற்சி எடுத்தால் இந்தியாவே விரைவில் பசுமை மிகுந்த நாடாக மாறும் என்பதில் ஐயமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: