ஒத்த செருப்பு size7″ ற்கான திரையரங்க எண்ணிக்கையை அதிகபடுத்த வேண்டுமென ரசிகர்கள் கோரிக்கை

“ஒத்த செருப்பு size-7 ” தமிழ் சினிமாவின் சாதனைப்படைப்பு. நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் அவர்களின் மாபெரும் சாதனை முயற்சியான இப்படைப்பு வெளியாகி தற்போது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படைப்பு வெளியாவதற்கு முன்பும் சரி பின்னரும் சரி பார்வையாளர்களின் அதீத வரவேற்ப்பை அப்படியே தக்க வைத்திருக்கிறது. ஆம், படம் வெளியாவதற்கு முன்பே படத்தினை பார்த்த சினிமாத்துறை உட்பட பிரபலங்கள் பலரும் படத்தினைப் பாராட்ட வார்த்தைகளின்றி திகைப்பில் ஆழ்ந்தனர்.

download (26)

தேசிய விருது நிச்சயமாகிவிட்ட நிலையில் பார்த்திபன் அவர்கள் நேரடியாகவே இப்படைப்பை ஆஸ்கருக்கு அனுப்பவேண்டும் என்பது மக்கள் கருத்தாகவுள்ளது.  சிறந்த படைப்பு சிறப்பாகவே போற்றப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர் சினிமா ரசிகர்கள்.

இப்படைப்பு வெளியாகி மக்களின் வரவேற்பையும் அதிகமாக பெற்று வருகிறது. ஆனால் படம் வெளியாகி சிறப்பாக ஓடிக்கொண்டிருந்த நிலையில் இந்த வாரத்தில் முன்னணி ஹீரோக்களின் படங்களும் ரிலீசாகியுள்ளதால் ஒத்த செருப்பு படத்திற்க்கான திரையரங்குகளின்  எண்ணிக்கையையை திரையரங்க உரிமையாளர்கள் குறைத்துள்ளனர்.

download (27)

இதனால் ஒத்த செருப்பு படத்திற்கு செல்லும் மக்கள் டிக்கெட் கிடைக்காததால்  வேறுவழியின்றி மற்ற படங்களை பார்த்து செல்லும் நிலைக்கு தள்ளப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் ஒத்த செருப்பு திரைப்படம் பார்த்துவிட்டு பார்த்திபனின் ஒத்த செருப்பு திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு தகுதியுள்ள படம், தமிழக அரசு சார்பில் தேசிய விருதுக்கு பரிந்துரைக்கவுள்ளோம் என்று கூறியிருந்தார்.

இவ்வாறு அவர் பேசியதை கேட்டபிறகு திரையரங்க உரிமையாளர்கள் காட்சிகளின் எண்ணிக்கையை அதிகரித்து தருவதாக உறுதியளித்துள்ளனர் என பார்த்திபன் அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

திரையரங்க உரிமையாளர்களே ஒத்த செருப்பு போன்ற படைப்புகள் அரிதினும் அரிது. இது தமிழ்சினிமாவின் சாதனைப் பயணத்தின் ஆரம்ப புள்ளி. இந்த புள்ளி முடிவின்றி தொடர வருங்கால தமிழ் சினிமாவை முன்னெடுத்து செல்ல தாங்களும் முன்வர வேண்டும்.

download (28)

முன்னணி ஹீரோக்கள் அல்லாதவர்களின் திரைப்படங்கள் இரண்டாவது மூன்றாவது வாரங்களுக்கு பிறகே பொதுமக்களின் வரவேற்பை பொருத்து வெற்றிகரமாக ஓடத்தொடங்கும். அதுபோலவே ஒத்த செருப்பு என்னும் குழந்தையை சாதனையாளன் ஆக்கி வெற்றிபெறச் செய்ய பார்த்திபன் உட்பட ரசிகர்களும் முயன்று வருகின்றனர்.

இந்த முயற்சியில் திரையரங்க உரிமையாளர்களும் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டியது கடமைதானே. மிகப்பெரிய அங்கிகாரத்தை  இந்த படைப்பு நிச்சயம் பார்த்திபன் அவர்களுக்குப் பெற்றுத்தரும். அது தமிழ் சினிமாவின் சாதனை முயற்சியின் மாபெரும்  வெற்றியாக அமையும்.

otha-seruppu7-1568813888-1568967056 (1)

ஆகையால் திரையரங்க உரிமையாளர்கள் ஒத்த செருப்பு படத்திற்க்கான காட்சிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி கொடுக்கவேண்டும் என பொதுமக்க சார்பாக  தி மூவீஸ் ஆப் இந்தியா தமிழ் சார்பாக அன்பு வேண்டுகோள் வைக்கிறோம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: